Last Updated on May 18, 2022 by Dinesh
முதல்வர் ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு கட்டியணைத்து வரவேற்பளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..

மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு வழக்கிலிருந்து முழுமையான விடுதலை செய்து உச்ச நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது..
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு சம்மந்தமாக பேரறிவாளன் உட்பட 7 பேர் கைது செய்யபட்டு உச்சபட்ச தண்டனை வழங்கபட்டிருந்து.
பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மீதான உச்சபட்ச தண்டனை ரத்து செய்யபட்டு 7 பேருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது..
இதை தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னை விடுதலை செய்யுமாறும், மேலும் தனக்கு ஜாமீன் வழங்கிடுமாறும் உச்ச நீதிமன்றத்தை நாடினார் பேரறிவாளன்..
இதனை நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டது. மேலும், கடந்த 10 மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளன் கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது..
மேலும், பேரறிவாளனின் விடுதலை சம்மந்தமான வழக்கு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது..
இதையடுத்து, நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய் மற்றும் ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டபிரிவு 142-இன் மூலம் பேரறிவாளணை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்..
கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற சட்ட போராட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளதையடுத்து பேரறிவாளனுடைய தாயார் அற்புதம்மாள் மற்றும் அவரின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்..
இதனிடையே, வழக்கிலிருந்து முழுவதுமாக விடுதலை பெற்ற பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார்.