Namitha :கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நமீதா
Last Updated on May 10, 2022 by Dinesh
Namitha :கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நமீதாவிற்க்கு இணையத்தில் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது..

கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் சித்திக் இயக்கத்தில் விஜய் காந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நமீதா..
தனது முதல் படத்திலே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இதில் குறிப்பாக நடிகர் அஜீத் குமாருடன் பில்லா, தளபதி விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது..
நமீதா தமிழ் திரைபடங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக வலம் வந்தார்.

ஆனால் கடந்த 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கு பிறகு நமீதாவிற்க்கு தமிழ் மட்டுமின்றி பிற மொழி படங்களின் வாய்ப்புகள் மிக குறைந்து காணபட்டது..
இதை தொடர்ந்து, மானாட மயிலாட மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிக்கு ஜட்ஜ் ஆக கலந்து கொண்டு வந்தார். பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கபட்ட பிக்பாஸ் சீசன் 1 ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கலந்து கொண்டார்..
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் எதிர்பார்த்த அளவிற்க்கு பட வாய்ப்புகள் வராத நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் ராதாரவியுடன் நடிகை நமீதாவும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
பிஜேபியில் சேர்ந்து 8 மாதங்களை கடந்த பின்னர் நமீதாவிற்கு தமிழக பிஜேபியின் மாநில செயற்குழு உறுப்பினராக தற்போது வரை நியமிக்கபட்டுள்ளார்…
கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சௌதரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும், இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடும் நமீதாவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் இணையத்தில் குவிந்து வந்த நிலையில் தான் கர்ப்பமாக இருப்பாக கூறி நிகழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்..
புதிய அத்தியாயத்தை உணர்கிறேன், பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசித்த போது என்னுள் ஏதோ மாற்றம் ஏற்பட்டது. புதிய வாழ்க்கை, புதியது தொடங்குகிறது
நான் எப்போதும் விரும்பிய அனைத்தும் நீயே உனக்காக இவ்வளவு நாள் பிரார்த்தனை செய்தேன்,
உன் மென்மையான உதைகள், படபடப்புகள் என்னால் உணர முடிகிறது என தன்னுடைய நெகழ்ச்சியை வெளிபடுத்தி இருந்தார்..
இதனுடன் தான் கர்ப்பமான வயிற்றுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
இந்த பதிவை கண்டதும் ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் நமீதாவிற்க்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.