Last Updated on June 25, 2022 by Dinesh
பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருட்களை விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்..

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் தகன ஆலையில் சென்னை போலீசாரால் கைபற்றபட்ட 1350 கிலோ கஞ்சாவை அழிக்கும் பணியினை இன்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்..
கடந்த 2018 முதல் 2020 வரை சென்னை காவல் நிலையங்களில் கைபற்றபட்ட சுமார் 2.50 கோடி மதிப்பிலான 1350 கிலோ கஞ்சா காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் தீயிட்டு அழிக்கபட்டது..
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இதுவரை 404 வழக்கில் 639 பேர் கைது செய்யபட்டு அதற்கான வழக்குகள் நடைபெற்று வருகின்றன..

தமிழகம் முழுவதும் நடைபெற்ற கஞ்சா வேட்டையில் திரிபுரா, ஆந்திர போன்ற பகுதிகளிலில் இருந்து ரயில்கள், பேருந்துகள் மூலமாக இங்கு கொண்டு வந்து விற்பனை செய்த 115 கஞ்சா வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது..
மேலும், சென்னையில் தற்போது வரை 224 வழக்குகள் முடிவடைந்த நிலையில் சுமார் இரண்டாயிரம் கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்..
இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு அமைக்கபட்டிருந்த மணல் சிற்பங்களை பார்வையிட்ட காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போதை பொருள் குறித்து 42,000 மாணவர்களுக்கு இதுவரை விழிப்புணர்வு நடத்தபட்டதாக தெரிவித்தார்..
பின்னர்ம, மேலும் தமிழகத்தில் பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் சம்பந்தபட்ட அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் இதுவரையில் 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.