Last Updated on October 6, 2022 by Dinesh
இன்று காம்பியா நாட்டில் இருமல் மற்றும் சளி டானிக் குடித்த குழந்தைகளில் 66 குழந்தைகள் இறப்பிற்க்கு WHO எச்சரிக்கை விடுத்துள்ளது..

காம்பியா நாட்டில் திடீரென அடுத்தடுத்த குழந்தைகள் இறந்ததை அடுத்து அங்கு பெரும் அச்சம் ஏற்பட்டது. உடனே இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில் குழந்தைகள் திடீர் இறப்பிற்க்கு காரணம் இருமல் மற்றும் சளி டானிக் தான் என்று ஆய்வில் கண்டுபிடிக்கபட்டது..
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கையில் காம்பியாவில் 66 குழந்தைகள் இறப்பிற்க்கு காரணமான 4 வகையான இருமல் மற்றும் சளி டானிக் மருந்துகள் தயாரிப்பிற்கு கடும் எச்சரிக்கை விடுத்தது..
இந்த 4 வகையான மருந்துகள் கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்துவதாக WHO தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட இந்த நான்கு மருந்துகளும் இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் இயங்கும் மைடன் ஃபார்மாசிட்டிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது எனவும் இது குறித்து இந்தியாவில் உள்ள நிறுவனத்திடமும் மற்றும் ஒழுங்கு முறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது..
தற்போது காம்பியாவில் மட்டும் கண்டுபிடிக்கபட்ட இந்த நான்கு வகை இருமல் மற்றும் சளி மருந்துகள் மற்ற நாடுகளுக்கும் விநியோகம் செய்யபட்டிருக்கலாம் இவை நோயாளிகளுக்கு மேலும் தீங்கு விளைவிப்பத்தற்குள் அனைத்து நாடுகளும் இந்த தயாரிப்பு பொருட்களை புழக்கத்தில் இருந்து நீக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.