Rocketry அனைவரும் பார்க்க வேண்டிய படம் மாதவனை பாராட்டிய ரஜினி
Last Updated on July 4, 2022 by Dinesh
Rocketry அனைவரும் பார்க்க வேண்டிய படம் என மாதவனை பாராட்டிய ரஜினி காந்த அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்..

நடிகர் மாதவன் முதன் முதலில் எழுதி இயக்கி இருக்கும் திரைபடம் ராக்கெட்ரி தி நம்பி எஃபக்ட். முன்னாள் இந்திய விஞ்ஞசானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையாக கொண்டு உருவான ராக்கெட்ரி திரைப்படம்..
கடந்த ஜூலை (01-07-2022) அன்று திரை அரங்குகளில் வெளியிடபட்டது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக்கபட்ட ராக்கெட்ரி திரைப்படம் விமர்சன ரீதியாக சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..
திரை அரங்குகளில் ராக்கெட்ரி தி நம்பி எஃபக்ட் படத்தினை பார்த்த ரசிகர்கள் படத்தில் மாதவன் நன்றாக நடித்திருப்பதாகவும், இது அவர் அவர் இயக்கும் முதல் திரைப்படம் போல் தெரியவில்லை எனவும் பலவிதமான கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து இருந்தனர்..
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராக்கெட்ரி படத்தினை பாராட்டி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிபிட்டு இருப்பதாவது..
ராக்கெட்ரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் குறிப்பாக இளைஞர்கள். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்மபூஷன் திரு. நம்பி நாராயணன் வரலாறை மிக தத்ரூபமாக நடித்து படமாக்கி, இயக்குனராக தனது முதல் படத்திலே தலை சிறந்த இயக்குனர்களுக்கு இணையாக தாணும் நிரூபித்து இருக்கிறார் மாதவன்..
இப்படி ஒரு திரைபடத்தை கொடுத்ததற்க்கு அவருக்கு நன்றிகளும், பாராட்டுகளும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.