Last Updated on May 28, 2021 by Dinesh
Vijay-65 கூட்டணி மாஸ் என்ட்ரி கொடுத்த தளபதிவிஜய் மற்றும் கலாநிதி மாறன்.

நடிகர் விஜய் நடித்து திரைக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர் இத்திரைபடத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன் முறையாக நடிக்கிறார். இவருடன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
இந்த படத்திற்கு அனிருத் ரவிசந்திரன் இசையமைதுள்ளார் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊர்டங்கு அமலில் இருந்ததனால் படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்தனர்மாஸ்டர் பட குழுவினர்.
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் வந்து 8மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மாஸ்டர் திரைப்படம் திரை அரங்குகளில் தான் வெளியாகும்
என அப்படக்குழு தெரிவித்தது இதனை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் இணையத்தில் master என்ற ஹஸ்டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இதனிடையே மாஸ்டர் திரைபடத்தின் டீசர் தீபாவளி அன்று படகுழுவாள் வெளியிடபட்டது. இணையத்தில் டீசர் வெளியான சிறிது நேரத்தில் பல லட்சம் பரவையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
தற்போது வரை மாஸ்டர் படம் 45மில்லியன் வியூஸ் மற்றும் 2.5மில்லியன் லைக்குகளை பெற்று வருகிறது.
வரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைபடத்தை திரை அரங்குகளில் எதிர்பார்த்து இருந்த விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக விஜய் நடிக்கும் 65படத்தின் இயக்குனர் மற்றும் பட தயாரிப்பு பற்றிய அறிவிப்பு இன்று திடீரென்று அதிரடியாக வெளியானது.
Vijay-65 கூட்டணி மாஸ் என்ட்ரி கொடுத்த ‘தளபதிவிஜய்’
இதற்கிடையே நடிகர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை சன் பிக்சரஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்காக நடிகர் விஜய் மற்றும் விஜய்65 படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார், சன் பிக்சர் கலாநிதி மாறன் ஆகியோர் சந்தித்தனர்.
Vijay-65 கூட்டணி மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் மற்றும் கலாநிதி மாறன், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் என மூவரும் இணைந்து உரையாடுவது போன்று வீடியோ ஒன்றில் விஜய் நடிக்கும் 65 வது படத்திற்கான அறிவிப்பு ஒரு மோசன் போஸ்டர் போன்று வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் உற்சாகமாய் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஏற்கனவே நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர்.
தற்போது சிவகார்த்திகேயன் வைத்து டாக்டர் படத்தை இயக்கி இருக்கிறார் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.
vijay 65 படத்திற்கு அனிருத் ரவிசந்திரன் இசையமைக்க உள்ளார் படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை அவை வரும் காலங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
இப்படத்தின் அறிவிப்பிலே பட்டையை கிளப்பி இருப்பதால் படத்தின் கதை மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது
விரைவில் இப்படத்தின் படபிடிற்கான அறிவிப்புகள் பற்றி வெளியாகும் என ரசிகர்கள் அனைவரது மத்தியில் பெரும் எதிர் பார்ப்பு எகிரியுள்ளது.