Yannai movie : எனக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த பெரிய படம்
Last Updated on August 20, 2022 by Dinesh
Yannai movie : எனக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த பெரிய படம் என நடிகர் அருண் விஜய் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்..

இயக்குனர் ஹரி இயக்கத்தில் முதன் முறையாக நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் திரைப்படம் யாணை. இத்திரைபடத்தின் ட்ரைலர் நேற்று ( 30-05-2022) மாலை 6.00 மணிக்கு இணையத்தில் வெளியானது..
Drumsticks productions தயாரிப்பில் இயக்குனர் ஹரி இயக்கும் யாணை படத்தில் நடிகர் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகணி, யோகிபாபு, அம்மு அபிராமி,
கேஜிஎஃப் 1 பட வில்லன் நடிகர் ராமசந்திர ராஜு, ராதிகா சரத் குமார், ஆடுகளம் ஜெயபாலன், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்..
யாணை படத்திற்க்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எடிட்டராக அந்தோனி, ஒளிபதிவாளர்களாக பாபா பாஸ்கர், தீனா உள்ளிட்டோர் படத்தில் பணியாற்றியுள்ளனர்..
மேலும், யாணை படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களை பாடலாசியர்கள் அறிவு, சினேகன், ஏகாதசி உள்ளிட்டோர் எழுதி உள்ளனர்..
வரும் ஜூன் 17 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் யாணை படத்தின் ட்ரைலர் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டு நடிகர் அருண் விஜய், இயக்குனர் ஹரி மற்றும் யாணை படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்.
இதனை வரவேற்க்கும் விதமாக நடிகர் அருண் விஜய் பதிலுக்கு அன்பான செயலுக்கு மிக்க நன்றி சகோதரரே !!
உங்கள் வெற்றிக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி என நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரிப்ளை செய்திருந்தார் அருண் விஜய்..
இதையடுத்து yaanai படத்தின் ட்ரைலர் வெளியான ஒரே நாளில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது..
யுட்யூப் தளத்தில் தற்போது வரை யாணை படத்தின் ட்ரைலரை 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்குகளை பெற்று வருகிறது..
ஆக்ஷன், சென்டிமெண்ட் கலந்த யாணை படத்தின் ட்ரைலரை நடிகர்கள் ஆர்யா, பரத், கிருஷ்ணா, ஜெயம்ரவி, பிரசன்னா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரைலரை பகிர்ந்து நடிகர் அருண் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்..
இந்நிலையில் நேற்று யாணை படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அருண் விஜய் யாணை திரைப்படம் எனக்கு பெரிய படம் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கிராமப்புற கதையில் நடித்திருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
yaanai திரைபடத்தின் ட்ரைலர் கீழே இணைக்கபட்டுள்ளது..