Cinema NewsKollywood

நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

Last Updated on October 9, 2022 by Dinesh

நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை, நானும் நயனும் அப்பா அம்மாவாகிட்டோம் என ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விக்னேஷ் சிவன்..

நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
nayan & vignesh shivan

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத் குமார், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், நெப்போலியன், வடிவேலு நடித்த திரைப்படம் ஐயா, இந்த திரைப்படம் தான் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகை நயந்தாராவுக்கு தமிழில் முதல் திரைப்படம்..

ஐயா படத்திற்க்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சந்திரமுகி திரைபடத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவையே திரும்பி வைத்தார்..

Read Also | 47வருட திரை பயணத்தை கேக் வெட்டி கொண்டாடிய Rajinikanth | அன்றும், இன்றும் இந்திய சினிமா சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி காந்த்

நயன்தாரா நடித்த முதல் படம் ஐயா முதல் கடைசியாக நடித்த காத்துவக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரை நயன்தாரா நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்..

இந்நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வின் காதல் திருமணம் சென்னைக்கு அருகே உள்ள மகாபல்லிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், இயக்குனர் ஹரி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடியை வாழ்த்தினார்கள்..

இதை தொடர்ந்து வெளிநாட்டில் தேன் நிலவுக்கு சென்றிருந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி அங்கு எடுத்து கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர்.

திருமணத்திற்க்கு பிறகு நடிகை நயன்தாரா படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி பலதரப்பிலும் எதிரொலித்த நிலையில் இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து

இயக்கும் ஜவான் திரைபடத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி கேள்விகளுக்கு முற்று புள்ளி வைத்தது..

நயன்தாரா திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பது உறுதியானாலும் அவர் படபிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்க்கு காரணம் நயன்தாரா கர்ப்பமாக

இருப்பதனால் தான் அவரால் படபிடிப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை என வதந்திகள் பரவி வந்த நிலையில் இன்று விக்னேஷ் ட்விட்டரில் பதிவிட்ட செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது..

விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இன்று தெரிவித்து

இருப்பது. நானும் நயனும் அப்பா அம்மாவாகிட்டோம் நாம் ஆசீர்வதிக்கபட்டவர்கள் இரட்டை ஆண் குழந்தைகள்,

நமது பிரார்த்தனைகள் முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், அனைத்து நல்ல வெளிபாடுகளும் இணைந்து, நமக்கு 2 ஆசீர்வதிக்கபட்ட குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது.

உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்காக வேண்டும் உயிர் & உலகம் என பதிவிட்டு இரண்டு குழந்தைகளுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் இரூக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்..

கல்யாணமாகி வெறும் 4 மாதங்கள் தான் ஆகிறது அதுக்குள்ள எப்படி இரட்டை ஆண் குழந்தை என ரசிகர்கள் பலர் தங்களது அதிர்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !