Last Updated on November 29, 2022 by Dinesh
குரங்கம்மை என்ற பெயரை மாற்றி இனி இவ்வாறு தான் கூற வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது..

கடந்த 1958 இல் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனில் அமைந்துள்ள ஒரு ஆய்வு கூடத்தில் ஆராய்ச்சிகாக வைக்கபட்டு இருந்து குரங்கு ஒன்றிக்கு ஒரு புதிய விதமான வைரஸ் தொற்று இருப்பது கண்டறியபட்டது. ஆகவே அந்த புது வைரஸ்க்கு குரங்கம்மை என பெயர் வைக்கபட்டது..
இது 1970 ஆம் ஆண்டில் முதன் முதலில் மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் முதலில் காங்கோ நாட்டில் 9 வயது ஆண் குழந்தைக்கு தொற்று கண்டறியபடுகிறது..
பின்னர், உடன் நண்பர்களாக விளையாடி கொண்டிருந்த மற்ற இரண்டு குழந்தைக்கும் இந்த தொற்று அறிகுறிகள் கண்டுபிடிக்கபடுகிறது. இந்த இரண்டு குழந்தைகளும் லைபீரியா மற்றும் சியரா லியோனில் இருந்துள்ளனர்..
இந்த வைரஸ் பெரியம்மையை விட மிக எளிதில் பரவ கூடியது என சொல்லப்படுகிறது.
தற்போது, இந்த வைரஸ் குரங்கம்மை என்ற பெயரில் அழைக்கபட்டு வருகிறது. ஆனால், இனிமேல் இந்த வைரஸுக்கு குரங்கம்மை என அழைக்காமல் எம்போக்ஸ் ( M-Pox ) என அழைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது..
ஏனெனில், குரங்கம்மை என்ற பெயர் ஆப்பிரிக்கா மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதால் இனி Monkeypox என்ற பெயர் MPox என அழைக்க .உலக சுகாதார அமைப்பு முடிவு செய்யபட்டுள்ளது.