Last Updated on July 30, 2021 by Dinesh
எஸ்பிபி உடலுக்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1946-இல் ஜூன் மாதம் 4-ஆம் தேதி பிறந்தார் எஸ்பி பாலசுப்ரமணியம். 1966-இல்
தனது இசை பயணத்தை தொடங்கிய எஸ்பிபி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் என ஐந்து மொழிகளிலும் தனது குரலால் ரசிகர்களை மகிழ்வித்து வந்தவர் எஸ்பிபி..
இவர் 16-மொழிகளில் 40000-கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார்.. மேலும் இவர் 6-முறை தேசிய விருது மற்றும் 6-முறை ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி பிற மொழிகளிலும் ஏராளமான விருதுகளையும் பெற்றவர் எஸ்பிபி.
இவர் 2001-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் 2011-ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் ஆளுநர் கையால் பெற்றவர் ஆவார். கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார்.
இதை தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் நலம் தேறி வருவதாக தினமும் பல செய்திகள் வெளிவந்தன இந்நிலையில் திடீரென்று அவருக்கு உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது
ஆதலால் அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் மற்றும் உயிர் காக்கும் கருவிகளுடன் மருத்துவர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
பாலு எங்கே போன?-இளையராஜா உருக்கம்
எஸ்பிபி உடலுக்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் எஸ்பிபியின் உயிர் (25.09.2020 அன்று மதியம் 1.04 மணிக்கு) பிரிந்தது அவருக்கு தற்போது 74-வயது.
திரைத்துறையினர் இரங்கல்
இதை தொடர்ந்து எஸ்பிபியின் மறைவுக்கு திரை துறை பிரபலங்கள் மற்றும் அரசியியல் தலைவர்கள் பலரும் தங்களது வருத்தங்களையும், இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்கலை தெரிவித்து வந்தனர்.
எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தங்களது இரங்கல்களை தெரிவித்தனர்.
மேலும் பாடகர் எஸ்பிபி யை கௌரவிக்கும் விதமாக அவருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்தார்.
நடிகர் விஜய் இரங்கல்
இந்நிலையில் நடிகர் விஜய் எஸ்பிபி உடல் நல்லடக்கும் செய்யும் இடத்திற்கு நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்..
தாமரை பாக்கதில் உள்ள எஸ்பிபியின் இல்லத்தில் இன்று அவரின் உடல் நல்லடக்கும் நடைபெற்றது அங்கு ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் திரண்டு எஸ்பிபியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அப்பொழுது அங்க திடீரென நேரில் வந்த நடிகர் விஜய் எஸ்பிபியின் மகன் எஸ்பி சரணுக்கு ஆறுதல் கூறிவிட்டு எஸ்பிபியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பெருந்தொற்று காலத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா வேகமாக பரவும் என்பதனால் பெரும்பாலான நடிகர்கள் எஸ்பிபிக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாமல் போனது.
ஆனால், நடிகர் விஜய் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருப்பது சினிமா துறையில் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் #ThalapathyVijay என்ற ஹஸ்டாக் உருவாக்கி நடிகர் விஜயை வாழ்த்தி வருகின்றனர்.